முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோகித் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.

rbi bank photo from ani

ஆர்பிஐ வங்கி - ani

Published On :

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோகித் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.

சனிக்கிழமையுடன் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்த ரபி சங்கருக்குப் பதிலாக ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஜெயினின் நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர், மே 3 அல்லது அதன் பிறகு முறைப்படி பொறுப்பேற்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். ரோகித் ஜெயின் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். 1934-ஆம் ஆண்டின் ஆர்பிஐ சட்டத்தின்படி, மத்திய வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும்.

தற்போது ஆர்பிஐ-யின் மற்ற மூன்று துணை ஆளுநர்களாக சுவாமிநாதன் ஜே, பூனம் குப்தா மற்றும் எஸ். சி. முர்மு ஆகியோர் உள்ளனர். இன்றுடன் பதவிக்காலம் முடிந்த ரபி சங்கர் முதலில் 2021 செப்டம்பரில் மூன்று ஆண்டுகளுக்கு ஆர்பிஐ துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பிறகு அவருக்கு 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் தலா ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The government has appointed Rohit Jain as Deputy Governor of the Reserve Bank of India for a three-year term.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.