12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தமிழக ஆளுநர் பொறுப்பேற்றார் ராஜேந்திர ஆர்லேகர்!

தமிழக ஆளுநர் பொறுப்பேற்ற ராஜேந்திர ஆர்லேகர் குறித்து...

lok bhavan

தமிழக ஆளுநர் பொறுப்பேற்றார் ராஜேந்திர ஆர்லேகர். - படம்: Lok Bhavan / யூடியூப்

Published On :

தமிழ்நாட்டின் ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் இன்று(மார்ச் 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் ஆர். என். ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆர். வி. ஆர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவுள்ளார்.

இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. ஆர்லேகருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக ஆளுநராக இருந்த ஆர். என். ரவி, மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து சென்னையிலிருந்து விமானத்தில் தில்லி வழியாக கொல்கத்தாவுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (மார்ச் 12) பதவியேற்றுக் கொண்டார்.

Summary

Kerala Governor Rajendra Arlekar took charge as the Governor of Tamil Nadu today (March 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.