ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி!

தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி புறப்பட்டது பற்றி...

RN Ravi

தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி - X / ANI

Published On :11 மார்ச் 2026, 11:54 am IST

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி மாற்றப்பட்டிருக்கும் நிலையில், புதன்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி ஆளுநர் ஆர்.என். ரவி பதவி வகித்து வருகிறார். திமுக தலைமையிலான மாநில அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் பெரும்பாலும் மோதல் போக்கே நிலவி வந்தது.

இந்த காலக்கட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்ததும், மாநில அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஆளுநராக கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் நிலையில், சென்னையில் இருந்து புதன்கிழமை காலை புறப்பட்டார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி செல்லும் ஆர்.என். ரவி, அங்கிருந்து நாளை காலை கொல்கத்தாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு காவல்துறையினர் மரியாதை அளித்தனர்.

Summary

Governor R.N. Ravi leaves Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.