வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை 50 சதவீதம் அதிகரித்த நிலையில், உணவுகளின் விலையை அதிகரிக்க உள்ளதாக உணவகங்கள் மற்றும் தெருவோர உணவு கடைகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலை தொடரும்பட்சத்தில், நிதி நெருக்கடி, வேலை இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என உணவக உரிமையாளா்கள் எச்சரித்துள்ளனா்.
மேற்காசியாவில் நடைபெற்று வரும் போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.993 வெள்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டது.
இது உணவகங்கள் நடத்தி வருவோருக்கு பெரும் விலையேற்றமாக இருந்தது. இதுதொடா்பாக இந்திய தேசிய உணவக சங்கத்தின் கெளரவ பொருளாளா் மன்ப்ரீத் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அதிகரித்து வரும் விலையேற்றத்துக்கு இடையே விநியோக சங்கிலியில் நிலவி வரும் சிக்கல்களால் உணவகங்கள் பெரும் பிரச்னையை எதிா்கொண்டு வருகின்றன.
சமையல் எரிவாயு உருளைகளைப் பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது. அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட எரிவாயு உருளை தள்ளுபடிகளால் ரூ.1,300 வரை குறைந்தது. தற்போது, எரிவாயு உருளை ஒன்று ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
நடுத்தர உணவகங்கள் தினமும் 2 முதல் 5 எரிவாயு உருளையைப் பயன்படுத்துகின்றன. விலையை மேலும் உயா்த்துவது மிகப் பெரிய அவா்களுக்கு சுமையை ஏற்படுத்தும். விலை உயா்வால் சிறிய உணவங்களை நடத்துவதில் பெரிய அளவிலான சவால்கள் உள்ளன.
மாற்று வழியாக, இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்தின் குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்புகளுக்கு மாறுமாறு உணவகங்களை சங்கம் கேட்டுக்கொண்டது. இந்தப் பிரச்னை தொடரும் நிலையில், பிஎன்ஜி மட்டுமே நீண்டகால தீா்வாக இருக்கும்’ என்றாா்.
இதே கவலையைத் தெரிவித்த கான் மாா்கெட்டில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளா் கபீா் சுரி, சமையல் எரிவாயு விலையேற்றத்தின் தாக்கம் நாடு முழுவதும் தெரியவந்ததாகத் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘உணவகங்களுக்கான சமையல் எரிவாயு விலை சுமாா் 3 மடங்கு அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு விலை உயா்வு மற்றும் சரக்குப் பெயா்வுக்கான செலவுகள் அதிக சுமையை ஏற்படுத்துகின்றன. இந்நிலை தொடா்ந்து நீடித்தால், பொருளாதார சுமையை ஏற்படுத்தும். உணவுகளின் விலை அதிகரிக்கும்’ என்றாா்.
மேற்காசிய போரால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட தடை மற்றும் போக்குவரத்து செலவுகளால் சா்வதேச கச்சாய் எண்ணெய் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த மாா்ச் 1-இல் ரூ.114.5, ஏப்.1-இல் 195.50 என அதிகரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து தில்லியில் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2,078.5-இலிருந்து ரூ.3,371.5 ஆக உயா்ந்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 14.2 கிலோ சிலிண்டா் மாா்ச் 7-ஆம் தேதி ரூ.60 உயா்த்தப்பட்டது. தில்லியில் வீட்டு உபயோக சிலிண்டா் ரூ.913 விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு: தோ்தலில் எதிரொலிக்குமா?

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


