மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!

மகாராஷ்டிரத்தில் பாராமதி இடைத்தேர்தலில் மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் வெற்றி...

News image

சுநேத்ரா பவார் - IANS

Updated On :5 மே 2026, 11:39 am IST

மகாராஷ்டிர மாநிலம் பாராமதி இடைத்தேர்தலில் மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார், ஜன. 28 அன்று நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றார்.

பின்னர் சுநேத்ரா, தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அஜீத் பவார் மறைவால் பாராமதி தொகுதிக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தரப்பில் (அஜீத் பவார் தரப்பு) சுநேத்ரா பவார் போட்டியிட்டார். இவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆகாஷ் மோர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பின்னர் அஜீத் பவாருக்கு மரியாதை செய்யும் விதமாக தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். எனினும் பாராமதி தொகுதியில் சுயேச்சைகள் பலரும் போட்டியிட்டனர்.

ஏப். 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று நேற்று(மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அவர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் 2,09,921 வாக்குகள் பெற்று புதிய ராஷ்ட்ரிய சமாஜ் கட்சி வேட்பாளர் ஆர்ஒய் குட்கடே(873 வாக்குகள்)-வைவிட 2,09,048 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதுதவிர கர்நாடகத்தில் இரு தொகுதிகளையும்(பகல்கோட், தவன்கரே தெற்கு) காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.

Summary

Sunetra Pawar wins Baramati bypoll by over 2 lakh votes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.