தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாராமதி தொகுதியில் வாக்களித்தார் ரோஹித் பவார்!

ரோஹித் பவார் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

Rohit Pawar

ரோஹித் பவார் - x.com

Published On :

மகாராஷ்டிரத்தின் பாராமதி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரோஹித் பவார் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

ஜனவரி 28 அன்று நடைபெற்ற விமான விபத்தில் அஜீத் பவார் காலமானதைத் தொடர்ந்து, பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது, அவரது மனைவியும் மகாராஷ்டிரத்தின் துணை முதல்வருமான சுநேத்ரா பவார், இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

பிம்ப்ளி கிராமத்தில் உள்ள மாவட்டப் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ரோஹித் பவார் தனது வாக்கைச் செலுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் பவார்,

வழக்கமான தேர்தல் நாள்களில் காணப்படும் உற்சாகமும் மகிழ்ச்சியும் இன்று காணப்படவில்லை. ஏனெனில், பாராமதித் தொகுதி தனது மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரை இழந்துவிட்டது. சுநேத்ரா பவார் அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையையும் ரோஹித் வெளிப்படுத்தினார்.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

Summary

Nationalist Congress Party (SCP) MLA Rohit Pawar on Thursday remembered his uncle and former Maharashtra Deputy Chief Minister, late Ajit Pawar, amid bye-elections in the Baramati Assembly constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.