எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ரோஹித் சர்மாவின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்: மோர்னே மோர்க்கல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் அனுபவம் உதவும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா - படம் | ANI

Updated On :12 ஜூன் 2026, 9:58 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் அனுபவம் உதவும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடர் நாளை (ஜூன் 13) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெறுகிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவும் காயம் காரணமாக விலகினார். முக்கிய வீரர்கள் விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் அனுபவம் உதவியாக இருக்கும் என பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அனைத்து உடல் தகுதி சோதனையிலும் தேர்வாகியுள்ளார். அவர் தற்போது முழு உடல்தகுதியுடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தயாராக இருக்கிறார். ரோஹித் சர்மா நன்றாக இருக்கிறார். அவர் நன்றாக பயிற்சி மேற்கொண்டார். அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக உள்ளது என்றார்.

Summary

Indian team bowling coach Morne Morkel has stated that Rohit Sharma's experience will be helpful in the ODI series against Afghanistan.