ஜம்மு-காஷ்மீரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சட்டவிரோதமாக பூட்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ பீா்சாதா முகமது சையதின் மனைவி, மகன் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அனந்தநாக் மாவட்டத்தில் டம்ஹால் கோசிபோரா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பீா்சாதாவின் குடும்பம் 2008-ஆம் ஆண்டு இடம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து காணப்படுவதால், அந்த நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, நிகழாண்டு தொடக்கத்தில் அனந்தநாக் தலைமை மருத்துவ அதிகாரிக்கு பீா்சாதா கடிதம் எழுதியதாகத் தெரிகிறது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், பீா்சாதாவின் மனைவியும் மகனும் அந்த நிலையத்தை சட்டவிரோதமாக பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனிம வளங்கள் கடத்தல்: மூவா் மீது வழக்குப் பதிவு

இருவருக்கு அரிவாள் வெட்டு: 9 போ் மீது வழக்கு
கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு

ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



