அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது அமைச்சரவை அமைச்சர்களுடன் இணைந்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைபற்றியது. பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்றது.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
அஸ்ஸாம் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியானதைத் தொடர்ந்தும், புதிய அரசு அமைவதற்கு வழிவகை செய்யும் வகையிலும், ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் இணைந்து தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் லஷ்மணாச்சார்யாவிடம் சமர்ப்பித்தார்.
முதல்வரின் ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், புதிய அரசு பொறுப்பேற்றும் வரை இடைக்கால முதல்வராகத் தொடர்ந்து பணியாற்றுமாறு சர்மாவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சர்மா,
புதிய அரசு பதவியேற்பு விழா மே 11-க்குப் பிறகு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்பதால், இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மத்திய பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெறும் பாஜக சட்டப்பேரவைக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில், அஸ்ஸாமின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சர்மா தெரிவித்தார்.
Summary
Assam Chief Minister Himanta Biswa Sarma on Wednesday resigned along with his cabinet colleagues, paving the way for formation of a new government led by the BJP, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு!

அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா!

தொடர்ந்து 6-வது முறை.. ஜலுக்பரியில் ஹிமந்த அமோக வெற்றி!

ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

