அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோகை 89,434 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றார்.
2021-ஆம் ஆண்டில், அவர் முதன்முறையாக மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, ஹிமந்தா 1,01,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே முன்னிலையில் இருந்த சர்மா, 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,27,151 வாக்குகளைப் பெற்றார். அதேவேளையில் நியோக் 37,717 வாக்குகளைப் பெற்றார்.
1996-ஆம் ஆண்டில் ஜலுக்பரி தொகுதியில் அவர் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால், 2001-ஆம் ஆண்டு முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது.
2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அடுத்தடுத்த தேர்தல்களில், அவரது வெற்றி வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Assam Chief Minister Himanta Biswa Sarma on Monday won the Jalukbari constituency for the sixth consecutive term, defeating Congress candidate Bidisha Neog by 89,434 votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வர் பதவியேற்பு விழா!

அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா!

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!

ஜலுக்பரி தொகுதியில் அஸ்ஸாம் முதல்வர் தொடர்ந்து முன்னிலை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




