அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

அரசு வேலைக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராகாத திரிணமூல் அமைச்சா்கள்

மேற்கு வங்கத்தில் அரசு வேலைக்குப் பணம் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் ஆஜராக மறுத்துள்ளனா்.

News image

திரிணமூல் காங்கிரஸ் - Trinamool Congress

Updated On :7 மே 2026, 3:50 am IST

மேற்கு வங்கத்தில் அரசு வேலைக்குப் பணம் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் ஆஜராக மறுத்துள்ளனா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் 207 இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றிபெற்றது. இதனால் மம்தா பானா்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் சுஜித் போஸ் மற்றும் ரதின் கோஷ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘குளியலறையில் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் 10 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியதாகக் கூறி ரத்தின் கோஷ் கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக மறுத்துவிட்டாா். இதுதொடா்பாக அமலாக்கத் துறைக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட கட்சி நிா்வாகிகளை கவனித்துக் கொள்வதால் வேறு தேதியில் ஆஜராக அனுமதி தருமாறு சுஜித் போஸ் கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்றனா்.

அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் ரத்தின் கோஷ் வெற்றிபெற்றாா். சுஜித் போஸ் தோல்வியடைந்தாா்.

முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக 2023, அக்டோபரில் ரத்தின் கோஷிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அவரது வீட்டில் சோதனைகளும் நடைபெற்றன. சுஜித் போஸிடம் நிகழாண்டு மே 1-ஆம் தேதி அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

தற்போது இருவரும் ஆஜராகாத நிலையில், வேறு தேதியில் ஆஜராவது குறித்து அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவுள்ளது.