பெங்களூரு : கர்நாடகத்தில் முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்பதைப் பற்றித் திரும்பத்திரும்ப கேட்பதில் அர்த்தமில்லை என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சித்தராமையாவுக்கும் டி. கே. சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. கட்சி மேலிடம் இவ்விவகாரத்தில் தலையிட்டு அதன்பின், ஆளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று கடந்த 2023-இல் ஓர் ‘அதிகாரப் பகிர்வு’ உடன்படிக்கை ஏற்பட்டது. இதையடுத்து, சிவக்குமாரை முதல்வராக்க அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு அழுத்தம் அளித்து வருகின்றனர்.
இது குறித்து, புதன்கிழமை(மே 6) செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்து சித்தராமையா பேசியதாவது : “கட்சி மேலிடம் இது குறித்து தீர்மானிக்கும். ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப கேட்பதில் அர்த்தமில்லை. மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ, அதுவே” என்றார்.
Summary
"Will act according to what high command decides": Siddaramaiah on CM tussle in Karnataka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சி மேலிடம் முடிவு செய்யும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

