கர்நாடக மாநிலம், தும்கூர் நகரத்தில் பறவைக் காய்ச்சலால் 44 மயில்கள் இறந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 16 ஆம் தேதி முதன்முதலில் பதிவானதாகவும், அதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்குள் தும்கூர் நகரத்தில் 44 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் அவர்கள் கூறினர்.
வனத்துறையின் தகவலின்படி, பறவைகளின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டதில், எச்5என்1 வைரஸ் தொற்றுதான் இந்த இறப்புகளுக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே, நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தும்கூர் நகரத்தில் எந்தப் பகுதியிலும் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Officials stated on Friday (May 1) that 44 peacocks have died due to bird flu in the city of Tumkur, Karnataka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









