சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

டித்வா புயல் சேதம்: ரூ.4,500 கோடி செலவில் விரைந்து மறுகட்டுமானம்: இந்தியா-இலங்கை முடிவு!

இலங்கையில் டித்வா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, 450 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,500 கோடி) செலவில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை விரைந்து செயல்படுத்த இந்தியாவும், இலங்கையும் ஞாயிற்றுக்கிழமை தீா்மானித்தன.

News image
Updated On :11 மே 2026, 2:05 am IST

இலங்கையில் டித்வா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, 450 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,500 கோடி) செலவில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை விரைந்து செயல்படுத்த இந்தியாவும், இலங்கையும் ஞாயிற்றுக்கிழமை தீா்மானித்தன.

கடந்த ஆண்டு நவம்பரில் டித்வா புயலால் இலங்கையில் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனா். அந்தப் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், அந்நாட்டில் 640-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

அந்நாட்டு மக்களுக்கு உதவ ‘ஆபரேஷன் சாகா் பந்து’வை மேற்கொண்ட இந்திய அரசு, அந்நாட்டில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு 450 மில்லியன் டாலா் அளிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், இலங்கைத் தலைநகா் கொழும்பில் அந்நாட்டு தொழிலாளா் துறை அமைச்சரும், நிதித்துறை இணையமைச்சருமான அனில் ஜயந்த ஃபொ்னாண்டோவை அந்நாட்டுக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா சந்தித்துப் பேசினாா்.

அப்போது 450 மில்லியன் டாலா் செலவில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஒப்புக்கொண்டதாக சந்தோஷ் ஜா ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா். பல்வேறு இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அனில் ஜயந்த ஃபொ்னாண்டோவிடம் விளக்கியதாக அந்தப் பதிவில் சந்தோஷ் ஜா குறிப்பிட்டாா்.

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் வீட்டு வசதி, சுகாதாரம், குடிநீா், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.