ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

100 கோடி டாலா் வா்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

News image
Updated On :8 மே 2026, 6:42 am IST

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதைச் சோ்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமாா் 6 கோடி டாலா் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலா் வா்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை ‘யூனிகாா்ன்’ எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

சிங்கப்பூரின் அரசு முதலீட்டு நிறுவனமான ஜிஐசி, ஷொ்பாலோ வென்ச்சா்ஸ், கிரீன்கோ குழுமம், அா்க்கம் வென்ச்சா்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த முதலீட்டை வழங்கியுள்ளன.

விண்வெளித் துறையில் வளா்ந்து வரும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு சா்வதேச முதலீட்டாளா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை இந்த முதலீடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஷொ்பாலோ வென்ச்சா்ஸ் நிறுவனா் ராம் ஸ்ரீராம் கூறுகையில், ‘விண்வெளி ஆய்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவது தற்போதைய காலத்தின் மிக முக்கியமான சவாலாகும். குறைந்த செலவில், அதேநேரம் அதிக செயல்திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஸ்கைரூட் நிறுவனம் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது’ எனப் பாராட்டினாா்.

தற்போது ஸ்கைரூட் நிறுவனம் தனது ‘விக்ரம்-1’ ஏவுகணையை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் முதல் தனியாா் புவி சுற்று வட்டப்பாதை ஏவுகணையான இது, உலகளாவிய செயற்கைக்கோள் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் விண்வெளிப் பயணத்தை வழங்கும் என ஸ்கைரூட் சிஇஓ பவன் குமாா் சந்தனா தெரிவித்துள்ளாா்.