ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது மத்திய அரசு: அசோக் கெலாட்

இளநிலை மருத்துவப் படிப்பு க்கான தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கெலாட்டின் கருத்து...

News image

அசோக் கெலாட் - file photo

Updated On :1 மணி நேரம் முன்பு

நாடு முழுவதும் நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது இளைஞர்களின் எதிர்காலத்தோடு மத்திய அரசு விளையாடுவதாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். தேர்வு முடிந்து நான்கு நாள்களுக்குப் பிறகு, நீட் தேர்வின்போது சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை இன்று (மே 12) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அசோக் கெலாட் கூறுவதாவது,

வினாத்தாள் கசிவு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை மறைக்க முயன்றதன் மூலம், மத்திய அரசு இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதாக அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்து, அதுதொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தேசிய தேர்வு முகமை எடுத்த முடிவு, மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட துணிச்சலான நடவடிக்கை.

ராஜஸ்தான் பணியாளர் தேர்வு வாரியத்தில் நடந்த ஓஎம்ஆர் தான் முறைகேடு விவகாரத்தை, அரசுக்கு ஏற்படக்கூடிய அவமானத்தைத் தவிர்க்கும் நோக்கில் ராஜஸ்தான் பாஜக அரசு மூடிமறைக்க முயன்றது.

இந்த வழக்கில், அரசின் சார்பில் சட்டரீதியான வாதங்கள் வலுவின்றி அமைந்ததே குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணை பெறுவதற்கு வழிவகுத்து.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல்களும் மறைக்கப்பட்டன. ஆரம்பத்தில் இதுதொடர்பாக எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது உண்மை வெளிவந்துவிட்டதாகவும், பாஜக அரசின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்வுக்கு முன்னதாக மாணவர்களிடையே பரப்பப்பட்டதாகக் கூறப்படும் மாதிரி வினாத்தாள் மீது தற்போது விசாரணை செலுத்தப்பட்டு வருவதாக, ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழுவின் கூடுதல் தலைமை இயக்குநர் விஷால் பன்சால் திங்களன்று தெரிவித்திருந்தார்.

Summary

Former Rajasthan chief minister Ashok Gehlot on Tuesday said the cancellation of the NEET (UG) examination indicated large-scale irregularities in the test and accused the BJP government in the state of trying to suppress the matter for two weeks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.