பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நீட் தேர்வில் முறைகேடு! ஆயுர்வேத மாணவர் கைது! மாறுவேடத்தில் இருந்தவர்!

நீட் தேர்வில் முறைகேடு விவகாரத்தில் ஆயுர்வேத மாணவர் கைது செய்யப்பட்டார்.

NEET exam

நீட் தேர்வு - பிடிஐ

Published On :

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், ஆயுர்வேத மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவர் மாறுவேடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக, தேர்வு நடந்து நான்கு நாள்களுக்குப் பின் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. விரைவில் மறுதேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும், மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, ஏற்கனவே செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகின.

மாதிரி வினாத்தாள் என்ற பெயரில் கையால் எழுதப்பட்ட ஒரு வினாத்தாள் தேர்வுக்கு சரியாக 42 மணி நேரத்துக்கு முன்பு வாட்ஸ்ஆப்களில் பரவிய நிலையில் அதில் இருந்த 120 கேள்விகள் நீட் வினாத்தாளிலும் இடம்பெற்றிருந்தன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், நாசிக்கில் இளநிலை ஆயுர்வேத மருத்துவம் படித்துவந்த சுபம் கெயிர்நர் என்ற மாணவரை மகாராஷ்டிர காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த மாணவரின் இருப்பிடத்திலிருந்துதான் அந்த வினாத்தாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் அதனை டிஜிட்டல் நெட்வொர்க் மூலம் மற்றவர்களுக்குக் கசியவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இவரிடம் விசாரணை நடத்த மும்பையிலிருந்து சிபிஐ குழு விரைந்துள்ளது. இவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மாறுவேடத்தில் சுற்றித்திரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.