தமிழக முதல்வர் விஜய்யின் வெற்றியால், அரசியலில் களமிறங்குமாறு நடிகர் தில்ஜித் தோசஞ்ச்சுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் தில்ஜித் தோசஞ்ச் அம்மாநிலத்தின் அரசியலில் களமிறங்குவதாக வெளியான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் அரசியலில் களமிறங்க வேண்டுமென நடிகர் தில்ஜித் தோசஞ்ச்சுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் இன்று (மே 13) தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் அவர் கூறியதாவது:
“அரசியலில் களமிறங்குமாறு நடிகர் தில்ஜித் தோசஞ்ச்சுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவது கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது. நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யின் வெற்றியால், மக்கள் அரசியல் தலைவர்களை நம்புவதை நிறுத்தி விட்டதாக பாஜக கருதுகின்றது.
இதனால், பிரபலங்களை அரசியலில் களமிறக்க அவர்கள் (பாஜக) முயற்சிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.
Summary
Punjab CM Bhagwant Mann has alleged that the BJP is pressuring actor Diljit Dosanjh to enter politics.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

தோல்விகளுக்கு மேற்காசிய மோதலைக் காரணம் காட்டும் மத்திய அரசு: பஞ்சாப் முதல்வர்!

விஜய் முதல்வராவதைத் தடுத்தேனா? ரஜினிகாந்த் விளக்கம்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




