உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

சில்லறை எரிபொருள் விலை மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

Petrol & Diesel

பெட்ரோல் & டீசல் - பிரதிப் படம்

Published On :13 மே 2026, 6:19 pm IST

சில்லறை எரிபொருள் விலை மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் பங்கேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது, "மேற்கு ஆசியாவில் நெருக்கடி நீடித்தால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி, பொருளாதாரம் மீது அழுத்தம் ஏற்படுகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா - கோப்புப் படம்

எரிசக்தி நெருக்கடி தொடர்ந்து நீடித்தாலோ மோசமடைந்தாலோ சில்லறை எரிபொருள் விலையை காலவரையின்றி மாற்றாமலிருப்பதைத் தவிர்க்க முடியாது.

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலால், கலால் வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்,

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 70 டாலரிலிருந்து 120 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் ஒவ்வொரு நாளும் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கலால் வரிகளைக் குறைப்பாலும், அரசுக்கு ரூ. 1,70,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டு, நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது நடப்பதாய் தெரியவில்லை.

இதனிடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில், நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Summary

Petrol, diesel price hike in India a matter of time if Middle East conflict persists: RBI Governor Sanjay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.