தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

தில்லி: பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ஓட்டுநர், நடத்துநர் கைது!

தில்லியில் நிகழ்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து. - படம் - பிடிஐ

Updated On :1 மணி நேரம் முன்பு

தில்லியில் பேருந்துக்குள்ளேயே ஒரு பெண்ணை ஓட்டுநரும் நடத்துநரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மே 11 ஆம் தேதி இரவு நடைபெற்றதாகவும் அதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுதொடர்பாக தில்லி காவல்துறை சார்பில் அதிகாரபூர்வமாக செய்திகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி, இந்தச் சம்பவத்தை 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ’நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை’ சம்பவத்தோடு ஒப்பிட்டு, இது ஒரு "பெரும் அவமானம்" என்று தெரிவித்துள்ளது.

காவல்துறை தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் ஒரு தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சரஸ்வதி விஹாரில் உள்ள பி-பிளாக் பேருந்து நிலையம் அருகே அவர் சென்றபோது, ​​பேருந்தின் கதவருகே குற்றவாளிகளில் ஒருவர் நிற்பதைக் கண்டு அவரிடம் நேரத்தைக் கேட்டார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அந்தப் பெண்ணை பேருந்தினுள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மே 12 ஆம் தேதி, ராணி பாக் காவல் நிலையத்தில் சில குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

In Delhi, the driver and conductor of a sleeper bus allegedly sexually assaulted a woman inside the bus itself, police sources stated on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.