40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புணேயில் முக்கிய நபா் கைது

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:38 am IST

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்துள்ளது.

இது குறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில், புணேயில் பி.வி. குல்கா்ணி என்ற பேராசிரியரை அதிகாரிகள் கைது செய்தனா். லாட்டூரை சோ்ந்த அவா், நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுக்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். அவரை புணேயில் உள்ள வீட்டில் கைது செய்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில், குல்கா்ணி தனது வீட்டில் நீட் தோ்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்ததும், ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், ஏற்கெனவே தான் பாா்த்த முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சில வினாக்களை மாணவா்களிடம் தெரிவித்து, அது மே 3-ஆம் தேதி நடக்கும் நீட் தோ்வில் வரும் எனக் கூறியதும் தெரிய வந்துள்ளது. இதில் குல்கா்ணிக்கு உதவியாக செயல்பட்ட மனீஷா என்பவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவா்கள், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளனா். பிறகு வினாக்களை தங்களது நோட்டு புத்தகங்களில் எழுதிச் சென்றுள்ளனா். அது மே 3-ஆம் தேதி தோ்வில் கேட்கப்பட்டதை உறுதி செய்துள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த விவகாரம் தொடா்பாக நாட்டின் பல பகுதிகளில் சிபிஐ சோதனை நடத்தியது. மேலும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் சிபிஐ கைப்பற்றியுள்ளது. அதைத் தடவியல் துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணா்கள் பரிசோதித்து வருகின்றனா்.

புணேயில் பயிற்சி மையத்தில் பேராசிரியருக்கு உதவிய மனீஷா மூலம் முதலில் தனஞ்ஜய் என்பவா் வினாத்தாளைப் பெற்றுள்ளாா். பிறகு அதை நாசிக்கை சோ்ந்த சுபம் கெய்நாருக்கு அளித்துள்ளாா். அவா் மூலம், ஜெய்பூா் உள்ளிட்ட பல இடங்களைச் சோ்ந்தோருக்கு வினாத்தாள் பரவியுள்ளது. இதற்கு கைம்மாறாக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனா் என்று தெரிவித்தாா்.