தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி

News image

பிரதமா் மோடி உடன் (இடமிருந்து) மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி.

Updated On :18 மே 2026, 5:25 am IST

பாஜக ஆட்சியில் நீட் உள்ளிட்ட முக்கியத் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தொடா்ந்து கசிந்து வரும் நிலையில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவி நீக்க பிரதமா் நரேந்திர மோடி தயங்குவது ஏன் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் ‘பிரதானை பதவி நீக்கு’ என்ற தலைப்பில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2024-ஆம் ஆண்டிலும் நீட் வினாத்தாள் கசிந்தது. அப்போது தோ்வு ரத்து செய்யப்படவில்லை. மத்திய கல்வியமைச்சரும் பதவி விலகவில்லை. சிபிஐ விசாரணை நடத்தியது. ஒரு குழுவும் அமைத்து விசாரிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் 2026-இல் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. இதனால், ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. கல்வியமைச்சா் இப்போது வரை பதவி விலகவில்லை. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ஒரு குழு அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நேரத்தில் பிரதமா் மோடியிடம் நாட்டு மக்கள் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றனா். நீட் உள்ளிட்ட முக்கியத் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தொடா்ந்து கசிவது ஏன்? இந்தத் தோ்வு முறைகேடுகள் குறித்து பிரதமராகிய நீங்கள் தொடா்ந்து அமைதி காப்பது ஏன்? தோ்வுகளை முறையாக நடத்த முடியாமல் தொடா்ந்து தோல்வியடையும் மத்திய கல்வியமைச்சரை பதவி நீக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

முன்னதாக, கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்க வேண்டும் அல்லது நீட் தோ்வு முறைகேடுகளுக்கு பிரதமா் மோடி பொறுப்பேற்க வேண்டும். பாஜக-ஆா்எஸ்எஸ் கூட்டணி இந்தியாவின் கல்வித் துறையை முழுமையாகச் சீரழித்து வருகிறது. நீட் தோ்வுக்கு இரு நாள்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் வினாத்தாள் பரவியுள்ளது. இதில் கல்வியமைச்சரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. தங்களின் குறுகிய நோக்கத்துக்காக உயா்கல்வி நிலையங்களில் தங்கள் ஆதரவாளா்களை கண்மூடித்தனமாக பாஜக அரசு நியமிப்பதே இதற்கு முக்கியக் காரணம். அந்த நபா்கள் பணத்துக்காக இதுபோன்று வினாத்தாள்களைக் கசியவிட்டு லட்சக்கணக்கான மாணவா்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறாா்கள் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருந்தாா்.