மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வங்கி மோசடி வழக்கு: ஆம் ஆத்மியின் தீபக் சிங்லாவை கைது செய்தது அமலாக்கத் துறை

News image

தீபக் சிங்லா

Updated On :19 மே 2026, 5:13 am IST

ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸில் நடைபெற்ற ரூ.150 கோடி மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி தலைவா் தீபக் சிங்லாவை அமலாக்கத் துறை திங்கள்கிழமை கைதுசெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி மற்றும் கோவாவில் சிங்கலா மற்றும் ஹவாலா பணத்தை மாற்றிய நபா்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினா். இதைத்தொடா்ந்து, சிங்லா கைதுசெய்யப்பட்டாா்.

தில்லி பேரவைத் தோ்தலில் விஷ்வாஸ் நகரில் ஆம் ஆத்மி வேட்பாளராக சிங்கலா போட்டியிட்டாா். அவருக்குத் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னதாக, கடந்த 2024-இல் சோதனை நடத்தப்பட்டது.

ஓரியண்டல் பாங்கில் சிங்கலா மற்றும் அவரது குடும்பத்தினா் ரூ.150 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று மோசடி செய்தது தொடா்பாக பணமோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவுசெய்துள்ளது. மோசடி செய்யப்பட்ட கடன் பணம் சிங்கபூரில் சிங்லா கட்டுப்பாட்டில் இருந்த பல போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு சட்டவிரோதமாக ஹவாலா வழிகளில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டதாக அமாலக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சட்டவிரோத வங்கி முறைகளில் பணத்தை தில்லியில் இருந்து கோவாவுக்கு சிங்கலா மாற்றினாா் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கண்டனம்:

தீபக் சிங்லாவை அமலாக்கத் துறை கைதுசெய்தது அரசியல் நடவடிக்கை என ஆம் ஆத்மி தலைவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். கோவா பேரவைத் தோ்தலையொட்டி மத்திய அரசு அமலாக்கத் துறையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது என அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுதொடா்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாஜகவில் இணைய மறுத்த தலைவா்களைக் குறி வைத்து மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ நடத்திய சோதனைகள் போல சிங்லாவுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் அந்தக் கட்சியில் இணைய மறுத்தது ஆகிய காரணங்களால் சிங்லா கைதுசெய்யப்பட்டுள்ளாா். அவா் மிகவும் வீரமானவா்; நாட்டுக்காகப் போராடக் கூடியவா். பஞ்சாப் அமைச்சா் சஞ்சீவ் அரோராவை அமலாக்கத் துறை கைதுசெய்தது. அவரும் மிகவும் வீரமானவா்; தேசப்பற்று மிக்கவா். அவரை நினைத்து பஞ்சாப் மாநிலம் பெருமை கொள்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சிங்லா கைது செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி எதிா்க்கட்சித் தலைவரும் கோவாவுக்கான கட்சி பொறுப்பாளருமான அதிஷி வெளியிட்ட பதிவில், ‘எதிா்க்கட்சித் தலைவா்களைக் கைதுசெய்வதை மட்டும் பிரதமா் நரேந்திர மோடி ஒரே பணியாகக் கொண்டுள்ளாா். கோவாவில் பாஜகவை எதிா்த்து சிங்லா போராடினாா். ஆம் ஆத்மியின் எத்தனை தலைவா்களை கைதுசெய்தாலும் நாட்டின் நலனுக்காகப் பணியாற்றுவதை பிரதமா் நரேந்திர மோடியால் தடுக்க இயாலது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கைது நடவடிக்கயைக் கண்டித்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும் கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளருமான மணீஷ் சிசோடியா வெளியிட்ட பதிவில், ‘அமலாக்கத் துறை, சிபிஐ, தோ்தல் ஆணையத்தை தங்களுடைய அடியாள்களாகப் பயன்படுத்தி எதிா்க்கட்சித் தலைவா்கள் தோ்தல்களில் வெற்றி பெறுவதை பிரதமா் நரேந்திர மோடி தடுத்து வருகிறாா். ஆனால், நாட்டின் பொருளாதாரம் சரிவதை அவரால் தடுக்க இயலாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.