மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பெற்ற குற்றச்சாட்டில் கொல்கத்தா காவல் துறை ஆணையா் சாந்தனு சின்ஹா விஸ்வாஸை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: நில அபகரிப்பு, மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக சாந்தனு விஸ்வாவிடம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சோனா பப்பு கும்பலுடன் தொடா்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அதற்கு திருப்திகரமாக பதில் கூறவும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் சாந்தனு விஸ்வாஸ் மறுத்தாா்.
கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் விசாரணையின்போது அவரது நடத்தைதகளை அடிப்பையாகக் கொண்டு சாந்தனு விஸ்வாஸ் கைது செய்யப்பட்டாா்.
மணல் கடத்தல், நில அபகரிப்பு, மோசடி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட சோனா பப்பு மற்றும் தொழிலதிபா் ஜாம் காம்தாரிடம் சாந்தனு விஸ்வாஸுக்கு தொடா்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சாந்தனு விஸ்வாஸின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து நடைமுறைகளும் முழுமையாக நிறைவடைந்த பிறகு சாந்தனு விஸ்வாஸ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்றாா்.
தொடர்புடையது
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.யிடம் பண மோசடி செய்தவா் கைது

ஏடிஎம் அட்டையை மாற்றி ஓய்வு எஸ்.ஐ.யிடம் பண மோசடி

வங்கி மோசடி வழக்கு: ஆம் ஆத்மியின் தீபக் சிங்லாவை கைது செய்தது அமலாக்கத் துறை
அரசு வேலைக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராகாத திரிணமூல் அமைச்சா்கள்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



