தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமில் சஃபாரி ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய காண்டாமிருகம்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

அஸ்ஸாமில் தேசிய பூங்காவில் சஃபாரி ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய காண்டாமிருகத்தால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Rhino Attacks, Tries To Flip Safari Jeep At Assam National Park

ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கும் காண்டாமிருகம். - Video grab on X

Published On :

அஸ்ஸாமில் தேசிய பூங்காவில் சஃபாரி ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய காண்டாமிருகத்தால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மனாஸ் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இந்த நிலையில் பூங்காவிற்கு உட்பட்ட பான்ஸ்பரி பகுதியில், வனவிலங்கை காண அழைத்துச்செல்லப்பட்ட சஃபாரி ஜீப்பை நோக்கி ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தது.

பின்னர் நின்றுகொண்டிருந்த ஜீப்பை அந்த காண்டாமிருகம் பலமாகத் தாக்கியது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் உறைந்து போயினர். சுற்றுலாப் பயணிகள் பதற்றத்தில் சப்தமிட, ஜீப்பும் பலமாக குலுங்கியது.

சஃபாரி ஜீப் ஓட்டுநர் மிகுந்த சமயோசிதமாக செயல்பட்டு, வாகனத்தை அந்த ஆக்ரோஷமான காண்டாமிருகத்திடமிருந்து மெதுவாகவும் சாதுரியமாகவும் நகர்த்திச் சென்றார். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தப்பினர். இதுகுறித்த விடியோ தற்போது சமூகஊடகங்களில் வெளியாகி, பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

விலங்குகள் தங்கள் இயற்கை வாழிடத்தில் அச்சுறுத்தலாக உணரும்போதோ, தொந்தரவுக்குள்ளாகும்போதோ அல்லது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கும்போதோ இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.

Summary

A wild rhinoceros aggressively charged at a safari jeep in the Bansbari range of Assam's Manas National Park, creating tense moments for tourists inside the forest reserve. A video of the incident has now gone viral on social media, drawing widespread attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.