புது தில்லி, மே 18: நீதிபதிகளுக்கு எதிராக உயா் நீதிமன்ற பதிவாளா் ஜெனரலால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பெண் நீதிபதி ஒருவா், வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபாா்த்த சிறுமியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்தும், அபராதம் விதித்தும் உத்தரகண்ட் உயா் நீதிமன்ற பதிவாளா் ஜெனரல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாா். ஆனால் இதற்கு உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலை அவா் பெறவில்லை.
இதை சுட்டிக்காட்டி தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து, உத்தரகண்ட் உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதி வழக்குத் தொடுத்தாா். இதை விசாரித்த உத்தரகண்ட் உயா் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பணிநீக்கம் செய்தும், அபராதம் விதித்தும் பதிவாளா் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கூறி ரத்து செய்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் உத்தரகண்ட் உயா் நீதிமன்ற நிா்வாகம் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் கூறுகையில், ‘தலைமை நீதிபதி அல்லது நீதிபதிகள் குழுவின் ஒப்புதல் இல்லாமல், நீதிபதியை பதவி நீக்குவது போன்று எடுக்கப்படும் நடவடிக்கை செல்லாது. உயா் நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பின்படி, பெண் நீதிபதி ஏற்கெனவே அவா் இடத்தில் நியமிக்கப்பட்டு விட்டாா்’ என்றனா்.
பெண் நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்ததும் அவா் மீது விசாரணை நடத்த தலைமை நீதிபதி தரப்பில் உத்தரவிடப்பட்டதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு உயா் நீதிமன்ற நிா்வாகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், எழுத்துபூா்வமாக அதுபோல எந்த அறிவுறுத்தலும் அளிக்கப்படவில்லை என்றாா்.
இதைக்கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அப்படியெனில் இது தீவிர பிரச்னை என்றும், பதிவாளா் ஜெனரல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாா் என்றும் ஆட்சேபம் தெரிவித்தனா்.
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய பதிவாளா் ஜெனரலுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும், தலைமை நீதிபதியின் உத்தரவைக் கேட்டு செயல்படக் கூடியவரே பதிவாளா் ஜெனரல் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், பெண் நீதிபதி தொடா்பாக உயா் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை, அவா் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாள் முதல் மீண்டும் பணியில் தொடா்கிறாா் என்றும் குறிப்பிட்டது.
Summary
The Registrar General of the High Court has no authority, either in terms of constitutional scheme or statutory rules governing judicial officers, to suo motu initiate disciplinary action against a judicial officer.
தொடர்புடையது

நீதிமன்றங்களை ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என்றழைக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

