மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் பெற்றிருக்கிறார்.

News image

துஷார் குமார். - படம்: எக்ஸ்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பெற்றிருக்கிறார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டல்ன் உள்ள கிங்ஸ் கல்லூரியில் படித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துஷார் குமார். 23 வயதான இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றிருக்கிறார்.

தொழிலாளர் கட்சி கவுன்சிலரான இவர், 2023 ஆம் ஆண்டில் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகர கவுன்சிலில் இணைந்தார்.

இந்த நிலையில், இவர் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகர மேயராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மேயராகப் பதவியேற்பதற்கு முன், அவர் துணை மேயராகப் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் போர்ஹாம்வுட்டில் சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து துஷார் குமார் கூறுகையில், “பிரிட்டன் வரலாற்றில் மிக இளம் வயது இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறேன்.

இது ஒரு மகத்தான கௌரவம். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்ததிலிருந்து இப்போது நகரத்தின் மேயராகப் பணியாற்றுவது வரை, இந்தப் பயணம் உண்மையிலேயே ஒரு கனவு போல இருக்கிறது. தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட விரும்புகிறேன்” என்றார்.

Summary

A 23-year-old Councillor has become the youngest Indian-origin mayor in the history of the United Kingdom after being officially appointed Mayor of Elstree, Borehamwood.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.