சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!
/

மாநில நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு!

மாநில நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது தொடர்பாக...

News image

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - படம் - ஏஎன்ஐ

Updated On :19 மே 2026, 3:28 pm IST

கேரளத்தில் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்க, அந்த மாநில அரசு நிபுணர் குழுவை அமைத்தது.

முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கேரளத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிப்பதற்கு ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

முதல்வர் தலைமையிலான மூத்த நிதித்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அரசு அறிக்கையின்படி, இந்தக் குழுவிற்கு முன்னாள் அமைச்சரவைச் செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமை தாங்குவார் என்றும் நிதித்துறையில் கூடுதல் தலைமைச் செயலரக உள்ள கே.ஆர். ஜோதிலால் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த தெளிவான தரவுகளை வழங்குவதோடு, எதிர்கால கொள்கை முடிவுகளுக்கு வழிகாட்டவும் உதவும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளத்தில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் வி.டி. சதீசன் முதல்வராகவும் 20 உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் திங்கள்கிழமை (மே 18) பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The Kerala government constituted an expert committee to prepare a white paper on the state's financial situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.