பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வல்லுறவு வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவருக்கு ஜாமீன்! வரவேற்று ஊர்வலம் சென்ற ஆதரவாளர்கள்!

வல்லுறவு வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பற்றி...

Ghaziabad rape accused

சுஷில் பிரஜாபதி - x

Published On :

சட்ட மாணவியை வல்லுறவு செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ஹிந்து அமைப்பு தலைவரை மாலையிட்டு வரவேற்ற அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பான காணொலிகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவரான சுஷில் பிரஜாபதி, சட்டக் கல்லூரி மாணவியை வல்லுறவு செய்த வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காஜியாபாத் மாவட்டம், மோடிநகரைச் சேர்ந்த எல்.எல்.பி. சட்டப் படிப்பு பயிலும் மாணவி, கடந்த ஆகஸ்ட் 8, 2025 -ல் முராத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், ”காஜியாபாத் நீதிமன்றத்தில் தனக்கென ஒரு அலுவலக அறையைப் பெற்றுத்தர உதவுவதாகவும், சட்டத் தொழிலுக்குத் துணையாக இருப்பதாக உறுதியளித்து, சுஷில் பிரஜாபதி என்னை ஏமாற்றினார்.

மீரட் நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞரின் கீழ் பயிற்சிப் பெற்றுக் கொண்டு, சட்டப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது 2021-ல் முதல்முறையாக பிரஜாபதியைச் சந்தித்தேன்.

என்னை காரில் ஒரு குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அங்கு குளிர்பானத்தில் போதைப்பொருளைக் கலந்துகொடுத்து, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்” என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆகஸ்ட் 11, 2025 அன்று பிரஜாபதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிரஜாபதி, மே 17, ஞாயிறன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு மாலையிட்டு வரவேற்ற அவரது ஆதரவாளர்கள், தோளில் தூக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி, கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கடந்தாண்டு பிரஜாபதியை காவல்துறையினர் கைது செய்தபோது, அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையம் வெளியே திரண்டு கலவரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Hindu Organization Leader Granted Bail in Rape Case! Supporters Hold Procession to Celebrate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.