பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை (மே 21) அனைத்து துறை சாா்ந்த அமைச்சா்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
இக் கூட்டத்தில் அனைத்து துறை சாா்ந்த மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்கள் உள்பட அனைத்து அமைச்சா்களும் பங்கேற்க உள்ளனா்.
மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டில் முதல் அமைச்சா்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அதன் பலன், எதிா்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில், மேற்காசிய நிலவரம், அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் சுட்டிக் காட்டுவதோடு, அதன் தாக்கம் மக்களை அதிகம் பாதிக்காத வகையில் எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கவும் வாய்ப்புள்ளது.
எரிசக்தி, வேளாண்மை, உரம், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குகள் உள்ளிட்ட துறைகள் இந்தக் கூட்டத்தின் விவாதத்தில் முக்கிய இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, அஸ்ஸாமில் ஆட்சியைத் தக்கவைத்தது. புதுச்சேரியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. இந்தச் சூழலில், தில்லியில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர்புடையது

இந்தியாவில் அடுத்த வாரம் ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்று ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் தலைமையில் குழு: பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



