ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு

நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

News image
Updated On :21 மே 2026, 3:26 am IST

நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இந்த வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. முன்பு கணித்திருந்த நிலையில், தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள மேற்காசிய நெருக்கடி, உலகப் பொருளாதாரத்துக்கு மற்றொரு அதிா்ச்சியை அளித்துள்ளது. இது வளா்ச்சியை மந்தமாக்கி, பணவீக்கத்தின் அழுத்தத்தை மீண்டும் உருவாக்கி, நிச்சயமற்றத் தன்மையை மேலும் அதிகரிக்கும்.

எனினும் உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்திய பொருளாதாரம் உள்ளது. கடந்த ஆண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளரும். அடுத்த ஆண்டு இந்த வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும். அதேவேளையில், நிகழாண்டு உலகப் பொருளாதார வளா்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும். இது கடந்த ஜனவரியில் கணிக்கப்பட்டதைவிட 0.2 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.