சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்! அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

ஜார்க்கண்டில் 27 மாவோயிஸ்டுகள் சரண்!

ஜார்க்கண்டில் 27 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:10 pm IST

ஜார்க்கண்டில், 27 மாவோயிஸ்டுகள் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு, பல்வேறு வழக்குகளின் கீழ் தேடப்பட்டு வந்த 27 மாவோயிஸ்டுகள் இன்று (மே 21) ராஞ்சி காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களில் 123 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஆங்காரியா (எ) டோகோல் (வயது 50), 48 வழக்குகளில் தேடப்பட்டு வந்த காடி முண்டா (எ) குல்ஷன் (34) ஆகியோரும் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் எனவும், அவர்கள் ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

“ஆபரேஷன் நவஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 27 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர், 44 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 29 பேர் சரணடைந்துள்ளனர். இன்னும், மீதமுள்ள மாவோயிஸ்டுகள் சரணடைவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

Summary

It has been reported that 27 Maoists have surrendered to the police in Jharkhand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.