பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மே 24- ல் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தோ்வு: குறிப்பிட்ட வழித்தடங்களில் மெட்ரோ சேவை முன்கூட்டியே தொடக்கம்

குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை முன்கூட்டியே தொடங்கும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 மே 2026, 3:35 am IST

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடத்தும் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வையொட்டி, குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை முன்கூட்டியே தொடங்கும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக டிஎம்ஆா்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மே 24 அன்று பிங்க், மெஜந்தா மற்றும் கிரே வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலஅட்டவணையைக் காட்டிலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும். பிங்க் வழித்தடம் மஜ்லீஸ் பூங்காவில் தொடங்கி ஷிவ் விகாரில் முடிவடைகிறது. கிருஷ்ணா பூங்கா விரிவாக்கம் மற்றும் தாவரவியல் பூங்கா, தீபாளி செளக் மற்றும் மஜ்லீஸ் பூங்கா இடையே மெஜந்தா வழித்தடம் செயல்படுகிறது. தான்சா பேருந்து நிலையம் மற்றும் துவாரகாவை கிரே வழித்தடம் இணைக்கிறது.

இந்த வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக காலை 7 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இருப்பினும், யுபிஎஸ்சி முதன்மை தோ்வைக் கருத்தில் கொண்டு காலை 6 மணிக்கு இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிறது. காலை 7 மணி வரையில் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் என மெட்ரோ சேவை தொடரும்.

அதன் பின்னா் வழக்கமான ஞாயிறுக்கிழமை காலஅட்டவணையின்படி ரயில் சேவை தொடரும்.

தோ்வா்கள் தங்களுடைய தோ்வு மையத்துக்கு உரிய நேரத்தில் சென்றடைவதில் எந்த அசெளகாரியம் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய இத்தகைய ஏற்பாடுகளை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பிற வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான 6 மணியளவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அந்தச் செய்திக்குறிப்பில் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.