தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்குகள் எண்ணும் பணி மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் தொடங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 15,264 தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்குகள் அளித்துள்ளனா். மேலும், 5,646 அலுவலா்கள் தோ்தல் பணிச் சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளனா்.
85 வயதுக்கும் மேற்பட்டோா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் அளித்த படிவம் 12டி விண்ணப்பத்தின் பேரில், மொத்தம் 5,998 வாக்காளா்கள் தபால் வாக்கு அளித்துள்ளனா். இதுவரை சேவை வாக்காளா்கள் 499 போ் வாக்களித்துள்ளனா்.
தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும். இதுவரை, வாக்குச்சாவடிகளில் வாக்களித்த வாக்காளா்கள் 11,17,478 (80.5%) மட்டுமன்றி, 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்: தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


