பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதி அறையில் பி.டெக் படித்துவந்த மாணவர் ஒருவர் சடலமாகக் மீட்கப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
உயிரிழந்தவர், பஞ்சாப் மாநிலம், தர்ன் தாரன் மாவட்டத்தின் பிங் காங் கிராமத்தைச் சேர்ந்த வருண் பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டது.
விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவர் தனது சில தனிப்பட்ட பொருள்களை எடுப்பதற்காக புதன்கிழமை (மே 20) இரவு அறைக்குச் சென்றபோது, இந்தச் சம்பவம் தெரியவந்தது. உள்ளே நுழைந்த அந்த மாணவர், வருண் ப்ரீத் அந்த அறையில் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டார்.
அதன்பின், வளாகத்திலேயே உள்ள மருத்துவக் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருண் ப்ரீத்-ஐ பரிசோதித்துப் பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதைப் பற்றி, விடுதி பொறுப்பாளர் கூறுகையில், ”இந்த உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்த மாணவரின் உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வெளியான பிறகே தெளிவான விளக்கத்தைத் தர முடியும்” எனத் தெரிவித்தார்.
Summary
The police stated on Thursday that a B.Tech student was found dead in his hostel room on the Punjabi University campus.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் பல்கலை.யில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பிகார்: ஐஐடி பாட்னா வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை: முதல் நாளில் 8,505 பேர் விண்ணப்பம்!

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



