தமிழ்நாடு இளநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று (மே 3) தொடங்கியது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியது.
இதில், முதல் நாளான இன்று இதுவரை 8,505 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் www.tneaonline.org வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வசதியில்லாதவா்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
அசல் சான்றிதழை பதிவேற்ற ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாளாகும். இணையதளத்தில் கட்டணம் செலுத்தி கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான வழிமுறைகள், முழுமையான விவரங்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 1800-425-0110, theacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Summary
Tamil Nadu Engineering Admissions: 8,505 Applicants on Day One
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் மூத்த, இளம் எம்.எல்.ஏ.க்கள் யார் எவர்?

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை விவரம் அறிய செல்லும் முன் செய்ய வேண்டியது!

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

