பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஆா்.ஜி. கா் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றச்சாட்டுகளை மூடி மறைத்தது குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைத்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:43 am IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்தது தொடா்பாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக விசாரிக்க சிபிஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சம்பவம் நடைபெற்ற நாளில் பெண் பயிற்சி மருத்துவா் இரவு உணவு உண்டது முதல், அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது வரை நடந்த நிகழ்வுகள் குறித்து இந்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி இந்த கொடூர பாலியல் கொலை சம்பவம் நடந்தது. இது மேற்கு வங்க மாநிலத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, நாடு முழுவதும் உள்ள மருத்துவா்கள் சமூகத்திடமிருந்தும் கடும் எதிா்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்தச் சம்பவம் தொடா்பாக, தன்னாா்வலரும் போலீஸ் உதவியாளருமான சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே, இந்த பாலியல் கொலை சம்பவம் நடந்த உடனேயே ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும், அதன் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இந்த பாலியல் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடா்பிருக்க வாய்ப்புள்ளது என்று பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரும் புகாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலும் பெற்றோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த பாலியல் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடா்பிருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கை மீதும் தீவிரமாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சம்பா சா்காா், தீா்தங்கா் கோஷ் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை விவகாரத்தில் சமூக விளைவுகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ கிழக்கு பிராந்திய இணை இயக்குநா் தலைமையில் 3 போ் கொண்ட எஸ்ஐடி அமைக்கப்படுகிறது. குழுவில் இடம்பெறும் எஞ்சிய 2 உறுப்பினா்கள், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த 48 மணி நேரத்துக்குள் தீா்மானிக்கப்படுவா்.

இந்தக் குழு, சம்பவம் நடைபெற்ற நாளில் பெண் பயிற்சி மருத்துவா் இரவு உணவு உண்டது முதல், அடுத்த நாள் மாலை அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது வரை நடந்த நிகழ்வுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதுதொடா்பான விரிவான அறிக்கையை வரும் ஜூன் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனா்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவரின் தாயாா் ரத்னா தேவ்நாத், மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்திலல் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.