நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை!

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து...

News image

கொலை - பிரதிப்படம்

Updated On :17 மே 2026, 10:02 am IST

திருநெல்வேலியில் பெண் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகள் முத்துமாலை (36). திருமணமான இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். கணவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாலை, திருநெல்வேலி தியாகராஜ நகரில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் அவர் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் பெருமாள்புரம் நிலையத்தின் ஆய்வாளர் சாமி தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

முத்துமாலையின் உடல் உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில், நடத்தையில் சந்தேகம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Summary

In Tirunelveli, two individuals riding a two-wheeler hacked a woman to death on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.