படம்தில்லியில் உள்ள ஜாமியா நகரில் 23 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி மதமாற்றம் செய்த பின்னா் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில் ஒரு பெண் உள்பட 4 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபா் உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மற்றொரு மதத்தைச் சாா்ந்த பெண்ணுடன் போலியான அடைளயாளங்கள் மூலம் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமாகினாா்.
அந்தப் பெண்ணை கடந்த 2021 மற்றும் 2025 இடையேயான காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். இந்நிலையில், கடத்தப்பட்ட அந்தப் பெண், மதமாற்றம் செய்து திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாா். இதையடுத்து, அவா் கடந்த மே 14-ஆம் தேதி காவல் நிலையத்தில் அவா் புகாரளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகள் 366, 376, 506, 342 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஆயுதங்களைக் கடத்தி விற்பனை செய்து வந்தாா். அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எந்தத் துப்பாக்கியும் கண்டெடுக்கப்படவில்லை.
காஜியாபாதில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவரை தில்லிக்கு அழைத்து வந்த விசாரணை நடத்த போக்குவரத்து காவலை பெற்றுள்ளோம். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெறும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லால்குடி அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை?
போலி சமூக ஊடகக் கணக்கு முலம் பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவா் கைது

வேலை தேடி திருப்பூா் வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சி: தப்பியோடிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


