நீட் மறுதேர்வை வெற்றிகரமாக நடத்தக் கோரி, மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்னதாகவே அந்த வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இந்த நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகின்றது. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்துள்ளனர்.
இந்த நிலையில் வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை சுமூகமாகவும், நேர்மையாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு கோரி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது:
தற்போது நிலவும் கடுமையான வெப்ப அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக அத்தியாவசிய அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு, தேர்வை நடத்தும் மாவட்ட அதிகாரிகள், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவற்றில் பாதுகாப்பான குடிநீர், போதுமான இருக்கை வசதிகள், செயல்படும் மின்விசிறிகள், குளிர்விப்பான்கள், சுத்தமான கழிப்பறைகள், நிழலான காத்திருப்புப் பகுதிகள், தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Union Education Minister Dharmendra Pradhan wrote letters to State Chief Ministers on Monday, seeking their cooperation in successfully conducting the NEET re-examination.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








