எரிபொருள் விலையுயர்வால் மோடி அரசின் மீது அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தில் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கார்கே,
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்ததோடு, இது ஏழை மக்களைக் கொல்லும் ஒருவகையிலான விஷம். பிரதமர் மோடியின் தந்திரம் இது என்று விமர்சித்தார்.
பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்தி வரும் நிலையில், ஒரே வாரத்திற்குள் ரூ.10 முதல் ரூ. 12 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்த விரும்பவில்லை, மாறாக நாட்டை அழிவுப்பாதையை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறார். அதேவேளையில், தான் நாட்டிற்காகவே அனைத்தையும் செய்வதாகவும், தியாகம் செய்வதாகவும், மக்களுக்காக உழைப்பதாகவும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
மக்கள் துன்பப்படுகிறார்கள். பணவீக்கம் இதேபோன்று தொடர்ந்து உயர்ந்தால், வேலையின்மை அதிகரிக்கும், தொழிற்சாலைகள் மூடப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் மூடப்படும்.
அனைத்து தரப்பு மக்களும் மோடி அரசின் மீது மிகவும் கோபத்தில் இருப்பதாகவும், ஏழை மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் திறனற்ற அரசாக மோடி அரசு விளங்குவதாகவும் அவர் கூறினார்.
வினாத்தாள் கசிவுப் பிரச்னை அதிகரித்துள்ளது. இப்பிரச்னைகளில் பிரதமர் ஏன் கவனம் செலுத்துவதில்லை? அவர் நாட்டை ஆள வேண்டும், சுற்றுலாப் பயணியைப் போல் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சுற்றித் திரிய வேண்டும் என்று நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில்,
12 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் பிரதமர் மோடி பதவியேற்றபோது, கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு ரூ.108.05 அமெரிக்க டாலராகவும், டாலர்-ரூபாயின் மாற்று விகிதம் ரூ. 58.59 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.51-க்கும், டீசல் ரூ. 56.71-க்கும் இருந்தது.
இன்று, கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருந்தாலும், பெட்ரோலின் விலை சுமார் 42.8 சதவீதமும், டீசலின் விலை சுமார் 67.9 சதவீதமும் அதிகரித்துள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் ஒவ்வொரு துறையையும் பாதிக்கிறது. போக்குவரத்து முதல் உணவுப் பொருள்கள் வரை, சாமானிய மக்கள் மீதான பணவீக்கத்தின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் இருந்தபோதிலும், அரசின் லாப வேட்டை மட்டும் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு ஏன்? எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என்று கார்கே கேள்வி எழுப்பினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் சுமையை நுகர்வோர் மீது தொடர்ந்து திணிக்கும் பொதுத்துறை எரிபொருள் விற்பனை நிறுவனங்களின் நடவடிக்கையின் விளைவாக, பெட்ரோல் - டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டன. இரண்டு வாரங்களில் ஏற்பட்ட நான்காவது விலை உயர்வு இதுவாகும்.
Summary
Congress president Mallikarjun Kharge attacked the Centre on Tuesday over the rising fuel prices and claimed that people from all sections are very angry with the Modi government as they know that it is incapable of solving the problems of the poor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவிடம் தொலைநோக்குப் பார்வையும் தலைமைத்துவமும் அறவே இல்லை: கார்கே

எரிபொருள் விலை உயர்வு மோடி அரசு உருவாக்கிய நெருக்கடி: கார்கே குற்றச்சாட்டு!

TVK-விற்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை! - EPS தரப்பு

நாட்டின் பத்திரிகை சுதந்திரத்தில் கடும் சமரசம்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



