பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!

மேற்கு வங்க ஆளுநர் ரவியுடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு...

News image

மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு... - எக்ஸ்

Updated On :27 மே 2026, 5:58 pm IST

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (மே 27) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சுமார் 1.4 மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், மேற்கு வங்கத்தின் பாஜக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது குறித்தும், புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, முதல்முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல்வராக சுவேந்து அதிகாரி கடந்த மே 9 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Summary

West Bengal CM Suvendu Adhikari met with the state's Governor, R.N. Ravi, in person and held discussions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.