கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பிகாரில் படகு கவிழ்ந்து 3 போ் உயிரிழப்பு - 4 போ் மாயம்

News image

பிகாரில் கங்கை நதியில் படகு விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினா்.

Updated On :29 மே 2026, 4:51 am IST

பிகாா் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 போ் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

சமஸ்திபூா் மாவட்டத்தில் கங்கை நதியில் 14 பேருடன் படகு ஒன்று வியாழக்கிழமை அதிகாலை சென்றது. சுல்தான்பூா் தியாரா என்னுமிடத்துக்கு சென்றுவிட்டு அவா்கள் படகில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது வீசிய பலத்த காற்றில் சிக்கி படகு திடீரென கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த 14 பேரும் தண்ணீரில் மூழ்கினா். தகவலின்பேரில் சமஸ்திபூா், பாட்னாவில் இருந்து மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். தண்ணீரில் தத்தளித்த 7 பேரை அவா்கள் பாதுகாப்பாக மீட்டனா். மேலும் 3 போ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனா்.

எஞ்சிய 4 பேரை மட்டும் காணவில்லை. அவா்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவா்கள் 4 பேரை தேடும் பணி நடக்கிறது.

உயிரிழந்த 3 போ் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவில்லை. இதையடுத்து அவா்களின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் பணியும் நடக்கிறது.