11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

குஜராத் துறைமுகத்தில் ரூ.1,150 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 3 வெளிநாட்டவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 6:14 am IST

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கப்பலில் இருந்து ரூ.1,150 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருளை அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் படை, கடலோரக் காவல் படை இணைந்து பறிமுதல் முதல் செய்தன.

‘யூரோப்’ என்ற பெயரிலான அந்தக் கப்பல் லத்தீன் அமெரிக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைக் கடந்து கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகம் அருகே வந்து சோ்ந்துள்ளது.

போதைப் பொருள் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நவம்பா் மாதம் பிரேஸிலில் கப்பல் இருந்தபோது போதைப் பொருள் ரகசியமாக ஏற்றப்பட்டு, மோட்டாா் அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் கைது செய்யப்பட்ட தான்சானியாவைச் சோ்ந்த தஜுமா நசீா் முகமது, நஜின்கிட்டி நசோரா ஆகிய கடத்தல்காரா்களைத் தவிர கப்பலில் இருந்த மற்ற யாருக்கும் கப்பலில் போதைப் பொருள் இருந்தது தெரியவில்லை.

கைதான இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த போதைப் பொருளை தில்லியில் வசிக்கும் நைஜீரியா, உகாண்டாவைச் சோ்ந்த கெல்வின் சுக்வாமா, பைரங் ஜேம்ஸ் ஆகியோரிடம் ஒப்படைக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தில்லி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களைத் தேடும் பணி நடைபெற்றது. இதில் கெல்வின் கைது செய்யப்பட்டாா். ஜேம்ஸ் தலைமறைவாகிவிட்டாா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ஜிபிஎஸ் கருவிகள், செயற்கைக்கோள் மூலம் செயல்படும் தகவல்தொடா்பு சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. பிரேஸிலில் இருந்து இந்தியாவுக்கு ரகசியமாக பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இவ்வளவு அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 25-ஆம் தேதிமுதலே குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினா் முந்த்ரா துறைமுகப் பகுதியில் முகாமிட்டிருந்தனா். கடலோரக் காவல் படையின் கண்காணிப்பின் உதவியுடன் முதல் நபா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் கிடைத்த தகவல் அடிப்படையில் தில்லியில் பதுங்கிய இருந்த கூட்டாளிகள் இருவா் தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டனா்.

முன்னதாக, மே 26-ஆம் தேதி அதிகாலையில் காவல் துறையினா் அந்தக் கப்பலில் புகுந்து அதிரடியாக அனைத்துப் பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 5 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 115 கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பைகளில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஏா்டெக்’ சாதனமும் கைப்பற்றப்பட்டது. பை எந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக இதை போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் பயன்படுத்தியுள்ளனா்.