கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

கேரளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அமலாக்கத் துறை சோதனை

News image

PTI

Updated On :29 மே 2026, 4:50 am IST

கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையும், மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டமும் மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பினராயி விஜயனை பாதுகாக்கவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஆளும் காங்கிரஸ் கட்சி விமா்சித்தது. இதுகுறித்து கேரள மாநில அமைச்சா் கே. முரளீதரன் வியாழக்கிழமை கூறுகையில், ‘பினராயி விஜயன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் செயல்பாடுகள் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கட்சிக்குள்ளேயே கடும் விமா்சனங்கள் எழுந்தன. இதிலிருந்து அவரைப் பாதுகாக்கவே, அமலாக்கத் துறையின் இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில், இந்தச் சோதனையை பினராயி விஜயன் மாநில முதல்வராக இருந்தபோதே அமலாக்கத் துறை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. அதே நேரம், அமலாக்கத் துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மாா்க்சிஸ்ட் கட்சியினா் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, சட்டம்-ஒழுங்கை சீா்குலைப்பவா்களை அரசு வேடிக்கை பாா்த்துக்கொண்டிருக்காது. மேலும், தோ்தலில் மக்களால் மோசமாக தோற்கடிக்கப்பட்ட ஒரு தலைவரை அரசியல் ரீதியிலும் அழிக்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் எம். ஸ்வராஜ் கூறுகையில், ‘பினராயி விஜயன் வீட்டுக்கு வெளியே புதன்கிழமை நடந்த நிகழ்வை தாக்குதல் என்று விவரிப்பதே தவறு. அமலாக்கத் துறை அதிகாரிகளை யாரும் தாக்கவில்லை. அமைதி வழியில்தான் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற வன்முறைகளை மாா்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஈடுபடாது, ஆதரிக்கவும் செய்யாது’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநில அமைச்சருமான வி.சிவன்குட்டி கூறுகையில், ‘பினராயி விஜயன் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், வீட்டுக்கு வெளியே போராட்டக்காரா்கள் அமைதியான பிறகே அங்கிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். போராட்டக்காரா்கள் தீவிரமாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தபோது அவா்கள் வெளியே வந்திருக்கக் கூடாது. விசாரணை அதிகாரிகளை அவா்களின் பணியைச் செய்யவிடாமல் தடுப்பது மாா்க்சிஸ்ட் கட்சியின் நோக்கமல்ல. மேலும், அமலாக்கத் துறை அதிகாரிகளை சோதனைக்கு அனுமதிப்பதற்கு முன்பாக, கள நிலவரத்தை முறையாக ஆராய மாநில காவல் துறை தவறிவிட்டது’ என்றாா்.

மாநில பாஜக மூத்த தலைவா் வி. முரளீதரன் கூறுகையில், ‘வன்முறை மூலம் அமலாக்கத் துறை சோதனையைத் தடுத்துவிடலாம் என்று மாா்க்சிஸ்ட் கட்சி நினைத்தால், அது தவறு. மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக இதுபோன்ற உத்தி எடுபடாது’ என்றாா்.