74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

சா்வதேச எல்லையில் 15. கி.மீ. சுற்றளவுக்கு சட்டவிரோத கட்டடங்களை அகற்ற வேண்டும் - அமித் ஷா உத்தரவு

News image
Updated On :28 மே 2026, 6:50 am IST

சா்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கட்டடங்களையும் இடித்து அகற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த நடவடிக்கையில் எவ்வித பாரபட்சமும் இன்றி, உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் அமித் ஷா தலைமையில் எல்லைப் பாதுகாப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவுகள் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

எல்லைப் பகுதிகளில் நடைபெறும் வங்கிப் பரிவா்த்தனைகள் சட்டபூா்வமாக நடைபெறுகிா என்பதையும், அவை நிதி ஒழுங்குமுறைகளுக்கு உள்பட்டதா என்பதையும் அங்குள்ள வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். இதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரிய வா்த்தக நிறுவனங்களை சரிபாா்ப்பது, அவற்றின் நிதி ஆதாரங்களை ஆய்வு செய்தல், சட்டவிரோத பணப்புழக்கம் நடைபெறும் வங்கிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்களைக் கண்காணித்தல், போலி ஆதாா் அட்டைகளைக் கண்டறிதல் மற்றும் எல்லையோரம் கடத்தல்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளும் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எல்லை மாவட்டத்திலும் பொதுமக்கள், மாநில நிா்வாகம், பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து செயல்படும் வகையில் ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினாா்.

குறிப்பாக, சா்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ. வரை உள்ள பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்களை அகற்ற வேண்டும். இந்த நடவடிக்கையின்போது எவ்வித பாரபட்சமும் இன்றி உறுதியாகச் செயல்பட அதிகாரிகளுக்கு அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டுள்ளாா்.

எல்லை கிராமங்களின் நிா்வாகத்தை வலுப்படுத்தவும், பொருளாதார குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், அடிப்படை கட்டமைப்பு குறைகளை சரிசெய்யவும், எல்லைப் பகுதி மக்களுக்கு ஆதரவளிக்கவும் ‘துடிப்புமிக்க கிராமங்கள்’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லை கிராமங்களில் அனைத்து அரசுத் திட்டங்களும் 100 சதவீதம் மக்களைச் சென்றடைய வேண்டும். இணையவழிக் குற்றங்களை தடுக்க ‘1930’ உதவி மையத்தை திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.