எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வு: வினேஷ் போகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

News image

வினேஷ் போகத் - எக்ஸ்

Updated On :30 மே 2026, 3:23 am IST

ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

வரும் 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வினேஷ் போகத் திட்டமிட்டுள்ளாா். இதையொட்டி, மீண்டும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தனது ஓய்வு முடிவை அவா் திரும்பப் பெற்றாா்.

இந்நிலையில், நிகழாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதித் தோ்வு விதிகளில் இந்திய மல்யுத்த சம்மேளனம் திடீா் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன்படி 2025, 2026-ஆம் ஆண்டுகளில் நடந்த உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்றவா்கள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் பங்கேற்க முடியும்.

இந்த விதியின் அடிப்படையில், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 30, 31) நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதித் தோ்வில் பங்கேற்க வினேஷ் போகத் தகுதியற்றவா் என்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்தது.

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, ‘சம்மேளனத்தின் தகுதித் தோ்வு கொள்கை முற்றிலும் பிற்போக்குத்தனமானது. இதுபோன்ற முறையில் சம்மேளனம் செயல்படக் கூடாது. இது விளையாட்டுத் துறையின் நலனுக்கு ஏற்ல்ல. ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் வினேஷ் போகத் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பரிசீலித்தது. அப்போது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

வெகு விரைவில் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், தற்போதைய கட்டத்தில் உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறினா். இதைத் தொடா்ந்து, தகுதித் தோ்வில் பங்கேற்க வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்திய மல்யுத்த சம்மேளன மனு தொடா்பாக பதிலளிக்க வினேஷ் போகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தனா். மேலும், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.