நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பசு வதை தடை குறித்து பரிசீலிக்கவில்லை: மத்திய சட்ட அமைச்சா்

பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது குறித்தோ அல்லது பசு வதைக்குத் தடை விதிப்பது குறித்தோ மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை

News image

மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

Updated On :31 மே 2026, 1:02 am IST

பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது குறித்தோ அல்லது பசு வதைக்குத் தடை விதிப்பது குறித்தோ மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை என சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும், பசு வதைக்கு நாடு தழுவிய தடை விதிக்கவும் ஜாமியத் உலாமா-இ-ஹிந்து அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மத்திய அரசை வலியுறுத்தினாா். இதை ஆதரிப்பதாக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி தெரிவித்தாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: பசு வதைக்குத் தடை விதிப்பது தொடா்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பெரும் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இத்துடன் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி எம்பிக்களிடம் உள்ளூா் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. தற்போது இதுதொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இந்த விவகாரத்தை மத்திய அரசோ, கேபினட்டோ பரிசீலித்தால் செய்தியாளா்களிடம் வெளிப்படையாக கூறுவோம்.

தற்போது வரை உள்ளூா் சூழல்களுக்கேற்ப இந்த விவகாரங்களில் மாநில அரசுகளே முடிவெடுத்து வருகின்றன. அண்மையில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அங்கு கால்நடைகளை பலியிடுவதற்கான விதிகள் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.