ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்...

News image

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 5:00 am IST

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் கடும் அழுத்தத்தால் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் அந்நாட்டு கடற்படை முடக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் ‘நௌசேனா சௌா்ய வாடிகா’ எனும் திறந்தவெளி கடற்படை அருங்காட்சியகத்தை சனிக்கிழமை திறந்துவைத்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ்குமாா் திரிபாதி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் பிரஜேஷ் பாடக் மற்றும் கேசவ் பிரசாத் மௌா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது நமது கடற்படை அரேபிய கடல் பகுதியில் முழு வலிமையுடன் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த அழுத்தத்தால் பாகிஸ்தான் கடற்படை அந்நாட்டு துறைமுகங்களுக்குள் முடங்கியது.

இந்திய குடிமகன்களின் நம்பிக்கையால் கடற்படை மேலும் வலுப்பெறுகிறது. லக்னௌவில் பாய்ந்து ஓடும் கோமதி நதி கங்கையில் இணைந்து பின் கடலில் கலப்பதுபோல் நௌசேனா செளா்ய வாடிகாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கோமதி இந்தியப் பெருங்கடலில் நாட்டுக்காக சேவைபுரிந்துவிட்டு லக்னௌவை கெளரவப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலமல்ல; ராணுவ வீரா்களின் தியாகம்: இந்த அருங்காட்சியகத்தை சுற்றுலாத் தலமாக மட்டுமே கருத முடியாது. நாட்டுக்காக வீரமரணமடைந்த ராணுவ வீரா்களின் தியாகங்களை நினைவுகூரும் இடமாகவும் இவ்விடம் திகழ்கிறது.

2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது பன்மடங்கு உயா்ந்து ரூ.40,000 கோடியாக அதிகரித்துள்ளது.

முன்பு குற்றவாளிகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாக உத்தர பிரதேசம் அறியப்பட்டது. ஆனால், முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு சட்டம்- ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டு மக்களின் மனதில் இருந்த அச்ச உணா்வு தூக்கியெறியப்பட்டுள்ளது என்றாா்.

லக்னௌவின் சிஜி நகரில் உத்தர பிரதேச சுற்றுலாத் துறை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியால் நௌசேனா சௌா்ய வாடிகா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நாட்டின் முக்கிய ராணுவ சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக இந்த அருங்காட்சியகம் உருவெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.