ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் இன்று (மே 31) யாக சாலை பூஜை நடத்தினர். மேலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளிலும் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி இன்று (மே 31) நடைபெறவுள்ளது. இதில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி, சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் நோக்கத்தில் உள்ளது. இதனால், இறுதிப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்காக அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகத்தில் யாக சாலை பூஜை நடத்தினர். இதில் பெங்களூரு வெற்றிக்காக சிறப்பு மந்திரங்கள் கூறப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தினர்.
கடந்த ஆண்டும் பெங்களூரு அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் இதேபோன்று யாகசாலை பூஜை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
IPL 2026 Final Royal Challengers Bengaluru and Gujarat Titans special pooja and hawan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங்; முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யுமா?

என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் இவர்தான்; மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



